வியாழன், 27 நவம்பர், 2008

கோபால் மாமாவுக்காக விழுபுண்

பல காதல் கதைகளை போல் என் காதல் ஒன்னும் தரம் கோரசது இல்லை. நானும் ஒரு பொண்ணை லவ்வினேன். பல காரண காரியங்களை உள்ளடக்கியது. நானும் என் நண்பனும் ( வெங்கு ) படிப்பதை தவிர மற்ற முக்கியமான விசயங்களில் மூழ்கிய பத்தாம் வகுப்பு. அரும்பு மீசை குறுகுறுக்கும் காலமது. அரையாண்டு சமயங்களில், வேற வழியே இல்லாமல் படிப்பதாக நடிக்க ஆரம்பித்தால், உண்மையாகவே படிக்க ஆரம்பித்து விடலாமென அவனுடைய அண்ணன், முருகு சொன்னதிநின்று இருவரும் நடிப்பதற்க்கான வேளைகளில் இறங்கினோம்.


ஒரு நாள் கிருத்திகை ( எங்க ஏரியாவுக்கு லீவு) அறிவியல் புத்தகம் எடுத்துக்கொண்டு நானும் வெங்குவும் அதற்கான இடம் பார்த்து கொண்டு இருந்தோம். நல்ல இடம் ஒன்றை வெங்குதான் கண்டறிந்தான். அந்த கடுக்கை டியூஷன் வாத்தி பழனிச்சாமியின் வீட்டு வாசல் தான் அது. பழனிச்சாமியின் வேலையை பற்றி சிறிது அறிந்திருந்தோம். பகலில் கம்பனிக்கு போய்விடுவாறேன்ரும் இரவில் டியூஷன் வருகிறார் என வெங்கு சொல்லித்தான் எனக்கு தெரியும். வெங்கு அந்த காலத்திலேயே அதி புத்திசாலியை தெரிந்தான், பூட்டிய அவர் வீட்டின் திண்ணையில் நானும் வெங்குவும் படிப்பததற்கான ( நடிப்பதற்க்கான) வேலைகளில் இருக்கவில்லை எங்கள் முன் கிரிகெட் விளையடப்பட்டுகொண்டிருந்தது. நம்ம கோபால் ( என்னோட முன்னால் காதலியின்அப்பா) மாப்பிளை ரெண்டு பொண்ணு இருக்கு ஆளுக்கு ஒன்னை கட்டிகோங்க என பீடிகை செய்துகொண்டு இருந்தார். மனவோட்டம் அப்போதே டூயட் பாடிக்கொண்டு இருந்தது அவர் மகளிடம். பந்தா பண்ண வெறி வந்து விட்டது, சரி நடுச்சது போதும், நாமளும் விளையாட ஆரம்பிக்க, டீம் பிரித்தால் நானும் வெங்குவும் எதிர் எதிர் டீம். அப்போது டியூஷன் கட்டளைகளில் ஒன்று பத்தாம் வகுப்பு மாணக்கர் யாரும் விளையாட தடை அமுலில் இருந்த காலம். தில்லாக நான் மட்டைய எடுக்க வெங்கு பந்தை வீச முயல, நரகசுரன் போல நம்ம வாத்தி வரணுமா? மட்டையையும் பந்தையும் தூர விளாசி விட்டு தலை தெறிக்க ஓடினோம். கோட்டியாவது, கோபாலாவது.

அன்று மாலை டியூஷன் இல் அதிரடி செந்தில் -கவுண்டமணி காமெடி நடக்க ஆரம்பித்திருந்தது, ஒரு கவுண்டமணி (பழனிச்சாமி) ரெண்டு செந்தில்கள்(நான், வெங்கு) அடினாலும் அடி மரண அடி முதுகில் விழவும், வெங்கு புரள ஆரம்பித்தான், பேட்டையே பாக்கமாட்டேன் என அவசரமாய் உளறினாலும், அடிச்சு தூள் பண்ணிக்கொண்டிருந்தார். சிரிக்க முடியாமல் அடிஎன் முதுகில் விழவும், ரெண்டு பேரும் தரையில் உருண்டு கொண்டிருந்தோம். அந்த நேரங்களில் டியூஷன் ஜிகிடிகள் அனைத்து பேரின் கண்களுக்கு இந்த காட்சி விருந்தே இருந்திருக்கும் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.

மாமாவுக்கே முதுகில் தொலியை உரிக்கிறாங்க, மகளுக்காக என்ன என்ன அடிவாங்க வேண்டியிருக்குமோ......................

ஒரு வாரம் முதுகில் என்னை தடவிக்கொண்டு தூங்கும் படி ஆகிவிட்டது. அன்றோடு நானும் வெங்குவும் டியூஷன் விலக தருணம் பார்க்க ஆரம்பித்தோம். ஒரு வாரம் கழித்து ரெம்ப ஹோம் வொர்க் இருக்கு, டியூஷன் ஹோம் வொர்க் பண்ணி பள்ளிகூட ஹோம் வொர்க் பண்ண முடியாதென கூறி டியூஷன் வாழ்விற்கு ஒரேபுள்ளி வைத்தோம். முதுகில் தடவிய படியே,

2 கருத்துகள்:

அதிரை ஜமால் சொன்னது…

\\ஒரு வாரம் முதுகில் என்னை தடவிக்கொண்டு தூங்கும் படி ஆகிவிட்டது. அன்றோடு நானும் வெங்குவும் டியூஷன் விலக தருணம் பார்க்க ஆரம்பித்தோம். ஒரு வாரம் கழித்து ரெம்ப ஹோம் வொர்க் இருக்கு, டியூஷன் ஹோம் வொர்க் பண்ணி பள்ளிகூட ஹோம் வொர்க் பண்ண முடியாதென கூறி டியூஷன் வாழ்விற்கு ஒரேபுள்ளி வைத்தோம். முதுகில் தடவிய படியே,\\

இரசிக்கும் படியாக இருந்தது.

Please remove word verifications...

Go to "Dashboard" "Settings" "comments" "show word verification" "no"

Che Kaliraj சொன்னது…

ஒழுங்காய் படிக்காமல் பார்டரில் பாசாகி வந்த சராசரிக்கும் சற்று கீழான மாணவன். அடி என்றால் அது இடிபோல் இருக்க வேண்டுமென யோசித்து யோசித்து அடித்தார், சும்மா சொல்ல கூடாது மதவர்களுக்கு அது தீபாவளி போல இருந்தாலும் , எனக்கும் வெங்கு விற்கும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத "விருந்து" .

வந்ததற்கு நன்றி மீண்டும் வருக. அதற்குள் கிழிந்த டவுசரை மாற்றிக்கொண்டு வருகிறேன்.