செவ்வாய், 30 டிசம்பர், 2008

டஸ் என்று ஒருவன்


டஸ் பற்றி பதிவு போட வேண்டிய அவசியம் வந்து விட்டதை உணருகின்றேன். நீங்கள்
டஸ் என்றால் என்ன என்று இப்படி அவனை அறிமுகப்படுத்தி விடுகிறேன்.
டஸ் சராசரி மாணவன் ( அதாவது முப்பாது ஐந்து முதல் நாற்பது வரை) மதிப்பெண்களில் உலா வருபவன். நான் சொல்வதை சற்று கற்பனை செய்து பார்த்து விட்டால் அவனை நீங்கள் கண்டு விடலாம். நல்ல சிகப்பு நிறம் தட்ட குச்சியை விட சற்று பருமனான தேகம். பந்தா பண்ணுவது என்றால் என்னவென்ற தெரியாத அப்பாவி பிள்ளை (உண்மையிலே அவனுக்கு பந்தா பண்ணுவது என்றால் என்ன வென்றே தெரியாது )

நாங்கள் சப்பை பிகரு முன்னால கூட அலம்பல் பண்ணிதிரியும் போது அவன் யாரையும் ஏறடுத்து பார் பார்ப்பதில்லை ஏன் என்று எங்களுக்கு அன்றிலிருந்து இன்று வரை தெரியவில்லை. பள்ளி காலங்களின் இந்த கூத்து அரங்கேறும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் ஏமாந்தாலும் மறுபடியும் அந்த காரியத்தையே செய்வதால் எங்களுக்கு ஒருபோதும் அலுப்பதில்லை. அந்த காரியம் என்னவென்றால். பள்ளி காலங்களில் கடைசி பாட வேளைகளில் பெரும்பாலும் ஆசிரியர் வருவது இல்லை. டஸ் குறட்டையுடன் தூங்கிக்கொண்டு இருப்பான். அந்த வேளைகளில் நமது டிஸ் ( கேபிள் காரன்) அல்லது அவனது சகாவான மூக்கன் "டே டஸ் ஸ்கூல் விட்டாச்சு" என காதில் சொல்லுவார்கள் , உடனே யாராவது போகிறார்களா இல்லையா எனக்கூட பார்க்காது அவனுடைய பையை தூக்கிக்கொண்டு ஒடி விடுவான் . பாதி ஸ்கூலை iவிட்டு நூறு மீட்டர் வந்த பிறகுதான் அவனுக்கு புத்தி வரும் . கடுப்புடன் திரும்பி வந்து காரணமானவர்களை திட்டுவான்.

ஒருநாள், தலைமை ஆசிரியர் கண்ணில் இந்த காட்சி பட்டு தொலைக்க உடனே அவனை கூப்பிட்டு கண்டித்தார். காய்ந்த கேசரி ஜெகதீசனுக்கும் ( டஸ் தோழன்) டிஸ்க்கும் சண்டை வந்து இருக்கும் போது சில வாக்கியங்கள் கலவரத்தை தூண்ட கூடிய முறயில் அமைந்து இருக்கும்,

" உங்க கடை கேசரி எனக்கு பனியன் தைக்க ஆகிவிட்டது"
" உங்க கடை போண்டா கல்லு போல அடிவிழது"
"தோசை யை என் தம்பி பஸ் ஒட்டி விளையாடுறான்"

" உங்க கேபிள் விழுந்து ஊர்ல நாலு பேருக்கு கண்ணு போச்சு"

"கிழவிகள் உங்க tv யை பார்த்து மண்டைய போட்டு விட்டது"

(காஞ்ச கேசரி ஜெகதீசன் டஸ் இன் தீவிரமான நண்பன்)

இப்படி பல வழிகளில் டஸ் இன் புகழ் பரவி அதில் இந்த காஞ்ச கேசரி ஜெகதீசனும் முன்னால் சொன்னவனும் பலமான வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருப்பார்கள், இவர்கள் இப்படி என்றால் பாழப்போன இந்த எக்ஸாம் வந்து அவனவன் படிப்பு நாறிக்கொண்டு இருக்கும் . படிப்பவர் பக்கம் நம்ம கோஸ்டி மொத்த மாக சாயும். ஆனால் என்ன செய்வது இதில் டஸ் மட்டும் படித்து பாசாகிவிடுவான். மத பய புள்ளைக வழக்கம் போல ஆங்கிலத்திலும் கணக்கிலும் பெயிலாகி முழித்துக்கொண்டு இருப்பார். என்ன செய்வது ஆசிரியர் பின்பக்கத்தில் தூசி முழுவதும் போகும் அளவுக்கும் ஒரு இன்ச் வீங்கும் அளவுக்கும் நொச்சி குச்சியால் பின்னி பெடலெடுத்து விடுவார். அப்போது தான் டஸ் க்கு வாழ்நாளின் பிறப்பின் பயன் அடைவான்

4 கருத்துகள்:

அ.மு.செய்யது சொன்னது…

//அதாவது முப்பாது ஐந்து முதல் நாற்பது வரை) மதிப்பெண்களில் உலா வருபவன்//


வெகுவாக ரசித்தேன்.

இந்த மாதிரி டஸ் களும், காஞ்ச கேசரிகளும் இன்னும் நிறைய சுவாரசியமான கேரக்டர்களும் எல்லா பள்ளிகளிலும் இருக்கின்றனர்.

Che Kaliraj சொன்னது…

நன்றி அ.மு.செய்யது அவர்களே

//வெகுவாக ரசித்தேன்.

இந்த மாதிரி டஸ் களும், காஞ்ச கேசரிகளும் இன்னும் நிறைய சுவாரசியமான கேரக்டர்களும் எல்லா பள்ளிகளிலும் இருக்கின்றனர்.//

உண்மைதான் தோழரே

coolzkarthi சொன்னது…

நண்பரே நல்ல ஞாபக சிதறல்கள்....வெகுவாய் ரசித்தேன்....அனைத்து வகுப்பிலும் இது போன்று சிலர் இருப்பார்கள் என்கின்ற என் கருத்துக்கு உங்கள் ஒவ்வொரு போஸ்ட் உம் வலு சேர்க்கிறது.....நன்றி...

Che Kaliraj சொன்னது…

வாருங்கள் தோழர் coolzkarthi


என்ன செய்வது ? ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு கணத்தில் கோமாளியாய் மாறுவது திண்ணம். என்னதான் நாம் மற்றவரை கேலிப்பொருளாய் பார்த்தாலும் நாம் ஒரு நாளாவது , ஒரு கணமாவது கேலிப்பொருளாய் இருந்து இருந்து இருப்போம். சரிதானே தோழரே ?


வந்து வாழ்த்தியமைக்கு நன்றி