வெள்ளி, 16 ஜனவரி, 2009

கடலை கருப்புவின் நகைச்சுவை

கடலை
கருப்பையா என்று ஒருவர் எங்கள் காலேஜில் அறியாதவர் யாருமில்லை ( அதாவது எங்கள் மின்னணுவியல் பிரிவில் ) . பெயர் காரணம் பற்றி நாங்கள் விளக்கவேண்டிய அவசியம் இல்லை. கடலைகளை இவன் எப்பவுமே மூட்டை மூட்டையாக வருத்து வந்தவன். எனக்கு தெரிந்து இன்னும் பல மூட்டைகளை முது நிலை படிப்பிலும் வறுத்து வருகிறான் என மற்ற நண்பர்கள் புகார் கூறியவண்ணம் இருக்கிறார்கள். என்ன தண்டனை தருவதென்று தெரியவில்லை.


சரி அதெல்லாம் இருக்கட்டும் . நினைவில் நீங்க இடம் பெற்ற ஒரு சில காட்சிகளை மட்டும் கூறிக்கொள்கிறேன்.

அது நான்காம் பருவத்தின் மத்திய நாட்கள். நாட்டு நலப்பணி திட்டத்தில் எங்கள் மின்னணுவியல் மாணவர்களும், வணிகவியல் மாணவர்களும், பொருளியல் மாணவர்களும் ராஜகோபாலன் பட்டியில் சில பணிகளை ( அட , புதர்களை நீக்குவது, பாதை அமைப்பது ) செய்து வந்தோம் . ஐந்து மணி நேரம் இந்த உருப்படியான வேலைகளையும் மற்ற நேரம் வம்பில்லுக்கும் வேலைகளையும் செவ்வனே செய்து வந்தோம். தினமும் வேலை முடிந்ததும் கிணற்றில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தோம். அப்படி ஒரு நாள் நான் முதலில் தவ்வ, பின் உடனே நமது டலை தவ்வ , எச்சரிக்கை செய்ததால் உடனே வேகமாக நீந்தி வேறிடம் போய்விட்டேன். ஆனால் கருப்பு உள்ளே தவ்வி உள்நீச்சலில் பாய்ந்து வந்து கொண்டு இருந்தான். திடீரென மேலேழுந்தவன் அம்மா என கத்திக்கொண்டு உள்ளே சென்றான். என் நண்பர் சிலர் உடனே பாய்ந்து கடலையை மீட்டு கிணற்று மேட்டுக்கு கொண்டு சென்றனர். தலையில் ரத்தம் வர நாங்கள் பயந்து விட்டோம் . கருப்பு வேறு கத்தி ஆர்பாட்டம் செய்து கொண்டு இருந்தான் . என்னவோ முனகுவது போல் சத்தம் குறைத்து தலையில் வழிந்த ரத்தம் பார்த்து கூவிக்கொண்டு இருந்தான். நான் சற்று குனிந்து அவன் வாயருகே என்காதினை கொண்டு சென்றபோது " இம் இம் இம் முத்து வையும் " என்ற இந்த வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தான். முத்து என்பது இந்த கடலையின் வாணலி. ரெண்டு பெரும் கதையளக்க ஆரம்பித்தால், மற்றவர்களெல்லாம் துண்ட காணோம் துணிய காணோம் என தெறித்து ஓடிவிடுவர். ( முத்து என்பது எங்கள் பெண் தோழி)


"ஏண்டா நாயே நாங்களே பயந்து போயி இருக்கோம் நீ என்னடான்னா, முத்து வையும் , கொத்திப்போடும் னு எண்டா கழுத்தறுக்கிற என ஆளாளுக்கு முதுகில் அவனுக்கு தாளம் வாசிக்க, மெதுவாய் மிதிவண்டியில் தள்ளிக்கொண்டு போனார்கள் கடலையை. அந்த நேரத்தில் கூட கடலை எந்த அளவுக்கு கழுத்தறுக்கிற மாதிரி இருக்கிறான் என நாங்கள் நொந்து கொண்டோம் . மருத்துவ மனையில் அதைவிட கொடுமை நடந்து விட்டது என உடனே எங்கள் ஆசிரியருடன் வரச்சொல்லி, கடலையுடன் போனவன் அலைபேசி மூலம் தகவல் அளித்தான். என்னவோ ஏதோவென எங்களின் வானரப்படையுடன் மருத்துவமனையை அடைந்தார் எங்கள் நா.. தி ஒருங்கிணைப்பாளர்.

அங்கெ இருந்த செவிலியர், இது எதோ கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதால் வந்த விளைவே என்று வாதாடிக்கொண்டு இருந்தார், எனவே போலீஸ் வசம் செல்லுமாறு சொல்லிக்கொண்டு இருந்தார். ஒருங்கிணைப்பாளர் கடலை கிணற்றி உள்ள ஒரு ஊசியான கல்லில் மோதிய விளைவே இது என்றும் . யாரும் கடலையை தாக்க வில்லை என்று மன்றாடிய பின்னரே , கடலைக்கு தையல் போடப்பட்டது. இத்தனை சாக்காக வைத்து கொண்டு முகாமில் எந்த வேலையும் செய்யாமல் ஜாலியாக திரிந்தான் நமது கடலை.


முகாம் பயிற்சி முடிந்து கல்லூரி திரும்பியது முதல், எங்கள் எச். .டி ஏனிந்த காயம் என கேட்க கடலைமேல் இருந்த வெறுப்பில் எங்கள் நண்பன் ஒருவன் "போன இடத்துல வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதானே ஒரு கிழவிகிட்ட எடக்குபெசிக்கிட்டு இருந்தான் அதான் கிழவி பித்தளை பானையை வச்சு கடலை தலை மேல போட்டுருச்சு" அதான் இந்த விளைவு என மற்ற மாணவர்களும் ஆமோதிக்க கடலைக்கு பயங்கர கடுப்பில் எதிர்த்து பேச முடியாது இருந்தான்.

4 கருத்துகள்:

அ.மு.செய்யது சொன்னது…

//முத்து என்பது இந்த கடலையின் வாணலி//

ஹாஹா...கலக்குறீங்க காளிராஜ்.
மேலும் அந்த காமெடி கொலைகாரன் படம் அருமை..

Che Kaliraj சொன்னது…

வாருங்கள் தோழர் அ.மு.செய்யது,

பல நகைச்சுவை தருணங்களில், நிகழும் போது துன்பவியலாகவும் பின் நகைச்சுவை கூடியும் இருக்கும்

தங்களின் வருகைக்கு மிகவும் நன்றி

coolzkarthi சொன்னது…

ஹி ஹி ஹி ....கலக்கல்...

யூர்கன் க்ருகியர்..... சொன்னது…

நான் காலேஜ் படிக்கும்போது நான்தான் :ஆண்டி கடலை கமிசன் " தலைவர்.