திங்கள், 15 டிசம்பர், 2008

முட்டைகண்ணு கணேசனின் பதில்கள்

காலாண்டு ஒரு பாவச்செயல்
அரையாண்டு ஒரு பெருங்குற்றம்
முழு ஆண்டு ஒரு மனிதத்தன்மையற்ற செயல்

இந்த அரபரிச்சை (அரையாண்டு தேர்வு ) ஏன்தான் வருகிறதோ என்று எல்லோரும் தத்தம் பாசையில் புலம்பிய காலங்களில், அதாவது என்னை போல சராசரிக்கும் கீழ உள்ள மாணவர்களை மிகவும் பதம் பார்க்கும் தேர்வுகளில் ஒன்று இந்த அரையாண்டு அரக்கன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது கணேசன் என்றவன் நண்பனாக இருந்தான். முட்டைகண்ணு கணேசன் என்ற பட்டம் கொண்டு இருந்தான். ஆளு பார்க்கவே காமெடியாய் இருப்பான். இந்த லட்சணத்தில் குரல் வேறு மிக பிரமாதமாக இருக்கும். கருப்பசாமி குத்தகை காரர் படத்தில் வரும் "யங்க மின்கன் " போன்ற குரல். ஆளு நிதானமாய் பேசினால் கேட்க கூடியாதாயும், அவசரமாக பேசினால் மேற்கூறிய முறைப்படியும் இருக்கும். ஆதலால் பல புனைபெயர்கள் கொத்து கொத்தாக அவனை சரணடைந்த வண்ணம் இருந்தன.

பெயருக்கு ஏற்றது போல தொந்தியும் கூடவே இருக்கும் ( தும்பிக்கையும் எலியும் இல்லை ). அரையாண்டில் இருந்து அவனுக்கு பிடித்து சனியன். அறிவியல் சமூகவியல் பாடங்களில் நாங்கள் சும்மாவே முப்பத்தி ஐந்து எடுக்க பகீரத பிரதானம் எடுப்போம். என்ன செய்யலாம் என வெங்கு விடம் கேட்டோம் ( வெங்கு தான் அப்போது லீடெர்)
"அடுச்சு விடுவேன் மார்க்கு போடுவார்கள் "என ரகசியத்தை போட்டு உடைத்தான்.

நாங்கள் அதனை சீரியசாக எடுக்காமல் எதோ தெரிந்ததை எழுதி விட்டு மாற்ற வைகளை விட்டு விட்டு வந்து சேர. முட்ட கண்ணு மச்சான் மட்டும் நிறைய எழுதியிருக்கிறதை தம்பட்டம் அடித்து கொண்டு இருந்தான் . எங்களுக்கு அடிவயிற்றில் அடுப்பு எரிந்து கொண்டு இருந்தது.

திருத்திய பேப்பர்கள் வர ஆரம்பித்தன, பயம் தொண்டையில் சேர் போட்டு அமர்ந்தது. வழக்கம் போல சயின்ஸ் வாத்தியார் நடராஜன் (சமூகவியலுக்கு மட்டுமே எங்களுக்கு வந்தார்) முன்னோட்டத்துடன் ஆரம்பித்தார். டேய் உங்க பேப்பர திருத்தும் போது போற வாற சார்களெல்லாம் ஒருமாதிரியாய் பார்த்து விட்டது போறாங்க. நானா சிறுச்சுகிட்டு இருக்கேன். என்ன செய்ய அந்தமாதிரி எழுதி இருக்கிறீங்க. அவன் யாருன்னு நான் பாத்தாகணும்" அப்பிடீன்னு சொல்லிட்டு நம்பர் சொல்லிட்டு பேப்பர் குடுக்க ஆரம்பிச்ச பின்னாடி, நம்ம முட்ட கண்ணு மச்சான் பேப்பர் வரும்போது. வாடா நீதான அது ?

மாவீரர் பத்தி எழுத சொன்ன இந்த நாயே என்ன எழுதி இருக்குன்னு பாருங்க படி அந்த கேள்விய நீ எழுதுன பதிலோட சேர்த்து . வாசிக்க ஆரம்பித்தான்


" மகாவீரர் ஒரு பெரிய வீரர். ஒரு சமயம் காட்டுக்கு சென்று மன்னரை காப்பாற்றினார். அவர் பல பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றியவர். எனவே அவர் மகாவீரர் என அழைக்க படுகிறார்."

அடி விழா ஆரம்பமானது. டவுசரின் தூசி பறக்க பறக்க வெளுக்க ஆரம்பித்தார் அவனை. மாவீரர் என்ற பட்ட பெயரும் ஒட்டிக்கொண்டது.

அடுத்த பீரிடு அறிவியல், தமிழரசி வந்தார் (எங்கள் அறிவியல் ஆசிரியை). ஏற்கனவே நம் முட்ட கண்ணு விழி பிதுங்கி கண்ணீர் குளத்தில் நீந்தி இப்போது தான் கரைஎறி இருக்கான் . அதற்குள் அடுத்த வினை ஆரம்பமானது கொழுப்பு பற்றிய கேள்வியை " கொழுப்பு சத்து உள்ளவர்களுக்கு வயிறு வீங்கி குண்டாக இருக்கும் வயிற்றில் ஒரு குத்து விட்டால் அழுது விடுவார்கள் " என பதில் எழுதி இருந்தான் நம்ம ஆளு . அப்போது அடின்னாலும் அடி அப்படி ஒரு அடி . முழுதாய் வெளுத்து வாங்கப்பட்டு வந்து சேர்ந்தான்.

இப்படி அடிபட்டு அடிபட்டே படிக்க இயலாமல் தன்னுடைய மாணவர் பதவியை ராஜினாமா பண்ணிவிட்டு வேலைக்கு அந்த ஆண்டிலேயே போய்விட்டான்

வியாழன், 27 நவம்பர், 2008

கோபால் மாமாவுக்காக விழுபுண்

பல காதல் கதைகளை போல் என் காதல் ஒன்னும் தரம் கோரசது இல்லை. நானும் ஒரு பொண்ணை லவ்வினேன். பல காரண காரியங்களை உள்ளடக்கியது. நானும் என் நண்பனும் ( வெங்கு ) படிப்பதை தவிர மற்ற முக்கியமான விசயங்களில் மூழ்கிய பத்தாம் வகுப்பு. அரும்பு மீசை குறுகுறுக்கும் காலமது. அரையாண்டு சமயங்களில், வேற வழியே இல்லாமல் படிப்பதாக நடிக்க ஆரம்பித்தால், உண்மையாகவே படிக்க ஆரம்பித்து விடலாமென அவனுடைய அண்ணன், முருகு சொன்னதிநின்று இருவரும் நடிப்பதற்க்கான வேளைகளில் இறங்கினோம்.


ஒரு நாள் கிருத்திகை ( எங்க ஏரியாவுக்கு லீவு) அறிவியல் புத்தகம் எடுத்துக்கொண்டு நானும் வெங்குவும் அதற்கான இடம் பார்த்து கொண்டு இருந்தோம். நல்ல இடம் ஒன்றை வெங்குதான் கண்டறிந்தான். அந்த கடுக்கை டியூஷன் வாத்தி பழனிச்சாமியின் வீட்டு வாசல் தான் அது. பழனிச்சாமியின் வேலையை பற்றி சிறிது அறிந்திருந்தோம். பகலில் கம்பனிக்கு போய்விடுவாறேன்ரும் இரவில் டியூஷன் வருகிறார் என வெங்கு சொல்லித்தான் எனக்கு தெரியும். வெங்கு அந்த காலத்திலேயே அதி புத்திசாலியை தெரிந்தான், பூட்டிய அவர் வீட்டின் திண்ணையில் நானும் வெங்குவும் படிப்பததற்கான ( நடிப்பதற்க்கான) வேலைகளில் இருக்கவில்லை எங்கள் முன் கிரிகெட் விளையடப்பட்டுகொண்டிருந்தது. நம்ம கோபால் ( என்னோட முன்னால் காதலியின்அப்பா) மாப்பிளை ரெண்டு பொண்ணு இருக்கு ஆளுக்கு ஒன்னை கட்டிகோங்க என பீடிகை செய்துகொண்டு இருந்தார். மனவோட்டம் அப்போதே டூயட் பாடிக்கொண்டு இருந்தது அவர் மகளிடம். பந்தா பண்ண வெறி வந்து விட்டது, சரி நடுச்சது போதும், நாமளும் விளையாட ஆரம்பிக்க, டீம் பிரித்தால் நானும் வெங்குவும் எதிர் எதிர் டீம். அப்போது டியூஷன் கட்டளைகளில் ஒன்று பத்தாம் வகுப்பு மாணக்கர் யாரும் விளையாட தடை அமுலில் இருந்த காலம். தில்லாக நான் மட்டைய எடுக்க வெங்கு பந்தை வீச முயல, நரகசுரன் போல நம்ம வாத்தி வரணுமா? மட்டையையும் பந்தையும் தூர விளாசி விட்டு தலை தெறிக்க ஓடினோம். கோட்டியாவது, கோபாலாவது.

அன்று மாலை டியூஷன் இல் அதிரடி செந்தில் -கவுண்டமணி காமெடி நடக்க ஆரம்பித்திருந்தது, ஒரு கவுண்டமணி (பழனிச்சாமி) ரெண்டு செந்தில்கள்(நான், வெங்கு) அடினாலும் அடி மரண அடி முதுகில் விழவும், வெங்கு புரள ஆரம்பித்தான், பேட்டையே பாக்கமாட்டேன் என அவசரமாய் உளறினாலும், அடிச்சு தூள் பண்ணிக்கொண்டிருந்தார். சிரிக்க முடியாமல் அடிஎன் முதுகில் விழவும், ரெண்டு பேரும் தரையில் உருண்டு கொண்டிருந்தோம். அந்த நேரங்களில் டியூஷன் ஜிகிடிகள் அனைத்து பேரின் கண்களுக்கு இந்த காட்சி விருந்தே இருந்திருக்கும் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.

மாமாவுக்கே முதுகில் தொலியை உரிக்கிறாங்க, மகளுக்காக என்ன என்ன அடிவாங்க வேண்டியிருக்குமோ......................

ஒரு வாரம் முதுகில் என்னை தடவிக்கொண்டு தூங்கும் படி ஆகிவிட்டது. அன்றோடு நானும் வெங்குவும் டியூஷன் விலக தருணம் பார்க்க ஆரம்பித்தோம். ஒரு வாரம் கழித்து ரெம்ப ஹோம் வொர்க் இருக்கு, டியூஷன் ஹோம் வொர்க் பண்ணி பள்ளிகூட ஹோம் வொர்க் பண்ண முடியாதென கூறி டியூஷன் வாழ்விற்கு ஒரேபுள்ளி வைத்தோம். முதுகில் தடவிய படியே,

டவுசர்கள் கிழிவது ஆரம்பம்

ஹாய் நான் தாம்ப்லே டவுசர் பாண்டி. பல முன்னொட்டு, பின்னொட்டு வாங்கியதை உங்களுக்குக்கு சொல்லலாம்னு இருக்கேன்.